விழுப்புரம், நவ. 18: விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யூர் அகரம் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யூர் அகரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பூமிநாதன் (45) என்பவரது பெட்டிக்கடையை சோதனை செய்து போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் செஞ்சி தாலுகா தளவானூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ்(34) என்பவரிடம் புககையிலை பொருட்களை வாங்கியது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.15,000 மதிப்புள்ள 15 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் கைப்பற்றினர்.
The post புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.