புகைப்பனி, காற்று மாசுபாட்டால் திணறும் டெல்லி, மும்பை நகரங்கள்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

1 week ago 4

புதுடெல்லி,

டெல்லியில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களிலும் புகைப்பனி படர்ந்து காணப்படுகிறது. காற்றின் தர அளவும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக குறைந்த தொலைவே பார்க்க கூடிய தன்மை மற்றும் சுகாதார கேடுகள் ஆகியவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

உள்ளூரில் ஏற்பட்ட காற்று மாசுபாடு மற்றும் அண்டை மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பதில் ஏற்பட்ட காற்று மாசு ஆகியவை, டெல்லியில் கரும்புகையாக வான் வரை பரவி காணப்படுகிறது.

இவை, ஏற்கனவே காற்று மாசுபாட்டால் சிக்கி தவித்து வரும் டெல்லி மக்களுக்கு பரவலாக வேதனையை ஏற்படுத்தி உள்ளன. இன்று காலை 8 மணி நிலவரப்படி, டெல்லியில் காற்று தர குறியீடு 428 ஆக உயர்ந்து உள்ளது. இதனால், நகரம் கடுமையான பிரிவில் வைக்கப்பட்டு உள்ளது.

 

புதுடெல்லி ரெயில்வே நிலையம், எய்ம்ஸ் மருத்துவமனை, மயூர் விகார், பத்பர்கஞ்ச், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்பனி படர்ந்து காணப்பட்டது. ஆனந்த் விகார், பஞ்சாபி பாக், ஆர்.கே. புரம், லோதி சாலை, ஷாதிப்பூர், வாஜிப்பூர், ஜகாங்கீர்புரி உள்ளிட்ட பகுதிகளில் காற்று தர குறியீடு கடுமையான அளவில் உள்ளது.

 

இதேபோன்று, மராட்டியத்தின் மும்பை நகரில் காற்று தர குறியீடு 179 என்ற அளவில் உள்ளது. இது மித அளவில் உள்ளபோதிலும், நுரையீரல், இருதய பாதிப்பு உள்ள மக்கள் சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால், சில பகுதிகளில் 500 மீட்டருக்கு குறைவான தொலைவையே பார்க்க கூடிய சூழலும் உள்ளது.

Read Entire Article