கோவை: முருகப்பெருமானின் ஏழாம்படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்ரமணிய சாமி கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள மருதமலை முருகன் கோயில் என்பது முருகனின் ஏழாம்படை வீடாகவே கருதப்படுகிறது. முருக பக்தர்களின் மிக முக்கியமான தலங்களில் ஒன்றாக மருதமலை உள்ளது. இந்நிலையில் மருதமலை முருகன் கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா இன்று நடைபெற்று வருகிறது.
8.30 மணி அளவில் குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா செய்யப்பட்டுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவிற்கு பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். சரியாக 8.30 மணிக்கு ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு கோவிலிலும் உள்ள கலசங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு பொறுத்தவரை அதிகாலை 4.30 மணி முதலே ஆறுகால பூஜையிலிருந்து ஆரம்பித்தது. அதன் பிறகு 6 மணி முதல் 6.45 வரை மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 7.30 மணி அளவில் யாக சாலையிலிருந்து மூலவருக்கு திருகுடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வளம் வந்ததால் தீர்த்தத்தை கொண்டுவந்து குடமுழுக்கு செய்யப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக ஆதிமூலவர், ராஜகோபுரம், கொடி மரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடைபெறும். பின்பு 9 மணி அளவில் ஆதிமூலவர், விநாயகர், மருதமலை மூர்த்தி, சதீஸ்வரர், மரகதாம்பிகை,வீரப்பாகு உள்ளிட்ட தெய்வங்களுக்கும் தொடர்ந்து குடமுழுக்கு நடைபெறும்.
மூலவருக்கு பேரொளி வழிபாடு நடைபெற உள்ளது. அங்கு கூடி இருக்கும் பக்தர்கள் அரோகரா என்று முழங்கி முருகனின் பக்தி பரவசத்துடன் மூழ்கிய குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. நவீன தத்துவத்தை பயன்படுத்தி டிரோன்கள் மூலம் தீர்த்தத்தை தெளிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் கோவை மட்டும் அல்லாமல் அண்டை மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த குடமுழுக்கில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் குடமுழுக்கு விழாவை பார்வையிடுவதற்கு ஏதுவாக 10 எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருதமலை அடிவாரம் முதல் முருகன் கோயில் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். குடமுழுக்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா: அரோகரா என பக்தர்கள் பக்தி முழக்கம் appeared first on Dinakaran.