விருதுநகர், ஏப்.5: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் இன்று காலை உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் முதல் முறையாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் இன்று காலை 10 மணிக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பட்டியலின மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்: இன்று நடக்கிறது appeared first on Dinakaran.