விருதுநகர், ஏப்.5: மாரடைப்பால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு காவலர்கள் ரூ.23.30 லட்சம் நிதி உதவி வழங்கினர். விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய காவலர் தாத்தப்பா பாஸ்கர்(32), 2017ல் காவலர் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2.2.205ல் மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடன் தமிழக காவல் துறையில் 2017ல் பணியில் சேர்ந்த காவலர்கள் 2017 பேட்ஜ் காக்கும் உறவுகள் குழு என்ற வாட்ஸ்ஆப் குழு மூலம் 38 மாவட்டங்களை சேர்ந்த 6,921 காவல் நண்பர்களிடம் உதவித்தொகையாக ரூ.23,30,500 தொகையை பெற்றுள்ளனர்.
இத்தொகையை காவல் கண்காணிப்பாளர் கண்ணன், ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஆய்வாளர் பூமிநாதன் முன்னிலையில் உயிரிழந்த காவலர் தாத்தப்பா பாஸ்கர் மகன் குரு யோகேஷ் பெயரில் ரூ.12 லட்சம் வைப்புத்தொகை, மனைவி விஜயராணி பெயரில் ரூ.4 லட்சம் வைப்புத்தொகை, ரொக்கம் ரூ.1 லட்சம், தாய், தந்தை பெயரில் ரூ.6 லட்சம் வைப்புத்தொகை, ரொக்கம் ரூ.30,500 என ரூ.23,30,500 வழங்கினர். இதில் 2017 பேட்ஜ்மேட் காவலர்கள் சதீஸ்பாண்டி, சுந்தர்ராஜ், முகமது அஸ்லம் உள்பட பலர் பங்கேற்றனர்.
The post சக போலீசார் உதவிக்கரம் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.23.30 லட்சம் நிதி உதவி வழங்கல் appeared first on Dinakaran.