தேவையான பொருட்கள்
1 கப் ரவை
1/2 கப் பீட்ரூட் சாறு
7டீஸ்பூன் நெய்
1/4 கப் பால்
5 முந்திரி பருப்பு
7 கிஸ்மிஸ் பழம்
1 ஏலக்காய் தூள்
1/2 கப் சக்கரை
செய்முறை
கடாயில் நெய் ஊற்றி கிஸ்மிஸ் மற்றும் முந்திரி பருப்பினை நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும்.பின்னர் அதே கடாயில் ரவையை போட்டு நன்றாக வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் பீட்ரூட் சாறினை நன்றாக கொதிக்க விடவும்.கடாயில் பீட்ரூட் சாறை ஊற்றி சிறிது சிறிதாக ரவையை சேர்த்து கிளறவும். இப்போது சிறிது பால் சேர்த்து கிளறவும்.ரவை நன்றாக வெந்ததும் சக்கரை சேர்த்து கிளறவும்.5 நிமிடம் பின்னர் ஏலக்காய் தூள், கிஸ்மிஸ் மற்றும் முந்திரி சேர்த்து கிளறவும். நெய் சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.கடாயில் ஒட்டாத பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான பீட்ரூட் ரவா கேசரி தயார்.
The post பீட்ரூட் ரவா கேசரி appeared first on Dinakaran.