பீகார்: மத்திய மந்திரியின் சகோதரர் மகன் சுட்டுக்கொலை

1 month ago 6

பாட்னா,

பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ஜகஜித் யாதவ் மற்றும் விகல் யாதவ் ஆகிய இருவரிடையே தண்ணீர் குழாய் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென இருவரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், விகல் யாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜகஜித் யாதவ் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மந்திரி நித்யானந்த் ராயின் சகோதர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article