காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: இந்திய ராணுவம் கடும் பதிலடி

7 hours ago 2

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரின் ஹண்ட்வாரா மாவட்டத்தில் உள்ள நவ்காம் பகுதியில் பாகிஸ்தான் போர் நிறுத்த மீறி தாக்குதலை நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் குப்புவாரா, பூஞ்ச்,நவ்காம், உரி ஆகிய 4 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இரவு 7 மணி முதல் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு உரிய, தக்க, பலமான பதிலடியை கொடுத்து வருகிறது இந்திய ராணுவம். பாகிஸ்தானின் டிரோன்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் பணியில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒளிப்புள்ளியாக வரும் டிரோன்களை குறி பார்த்து சுட்டு வீழ்துகிறது இந்திய ராணுவம். 3-வது நாளாக இந்திய வான்வெளிக்குள் டிரோன்களை பாகிஸ்தான் ராணுவம் ஏவுகிறது.

ராஜஸ்தான், காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லை மாநிலங்களில் பல ஊர்களில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பல ஊர்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பார்மரிலும் விமான தாக்குதலுக்கான சைரனை ஒலிக்க விட்டு எச்சரிக்கை விட்டுள்ளது. எல்லையோர ஊர்களில் மருந்து கடைகள் தவிர ஏனைய கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. 

Read Entire Article