
பாட்னா,
பீகார் மாநிலத்தின் முஜாப்பர்பூரில் அடகுக்கடையில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைக்குள் திடீரென கையில் துப்பாக்கியுடன் ஒரு 5 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது.
அப்போது அங்கிருந்த சிலரை இந்த கும்பலில் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டி அங்கேயே பிடித்து வைத்தார். பின்னர் முகத்தில் துணியை சுற்றிக்கொண்டிருந்த அந்த கும்பல் அடகு கடையில் இருந்த ரூ. 2.5 லட்சம் ரொக்கம், ரூ.13 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடித்தனர்.
பட்டப்பகலில் துப்பாக்கி முனையில், அடகு கடையில் கொள்ளையடித்த கும்பலால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.