பீகார் கள்ள சாராய பலி 35 ஆக உயர்வு

3 months ago 17

பாட்னா: பீகாரின் சரண்,சிவான் மாவட்டங்களில் உள்ள மகர், அவுரியா மற்றும் இப்ராகிம்பூர் கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள் பலர் கள்ள சாராயம் அருந்தினர். இதில், உடல் நலம் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 25 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் மேலும் 10 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது என்று சரண் டிஐஜி நிலேஷ் குமார் தெரிவித்தார். கள்ள சாராயம் குடித்த 25 பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.

The post பீகார் கள்ள சாராய பலி 35 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article