நாளந்தா: பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். அங்கு வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தற்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டது.
நாளந்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் கலந்து கொண்டு பேசும் போது,’ பீகார் மாநிலத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். பீகார் மாநிலத்தின் அடுத்த முதல்வராக எனது மகன் தேஜஸ்வி யாதவ் வர வேண்டும். அப்போதுதான் அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். என் கட்சியினர் யார் முன்பும் தலைவணங்க மாட்டார்கள்’ என்றார்.
The post பீகார் அடுத்த முதல்வராக தேஜஸ்வியை ஆக்குங்கள்: லாலு பிரசாத் வேண்டுகோள் appeared first on Dinakaran.