பீகாரில் மெட்ரோ சுரங்கப்பாதை கட்டுமானத்தின்போது விபத்து: 3 பேர் பலி

4 months ago 18

பாட்னா,

பீகார் தலைநகர் பாட்னாவில் மெட்ரோ ரெயில் வழிப்பாதைக்கான சுரங்க கட்டுமானப் பணி நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், சுரங்க கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் நேற்று இரவு பழுதாகி விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 10 பேரில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லோகோ பிக்கப் பிரேக் செயலிழந்ததால் கட்டுமான தளத்தில் விபத்து ஏற்பட்டதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.

Read Entire Article