
பாட்னா,
பீகாரில் நேற்று பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் ஆங்காங்கே மின்னல் தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக மின்னல் தாக்கியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 5 பேர் மின்னலுக்கு பலியாகினர். தர்பங்காவில் 4 பேர், மதுபானியில் 3 பேர் மற்றும் சமஸ்திபூரில் ஒருவர் என ஒரே நாளில் 13 பேர் பலியாகி உள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் அறிவுரைகளை பின்பற்றுமாறு அவர் மாநில மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.