பாட்னா: பீகார் மாநிலம் தர்பங்காவில் மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் அம்பேத்கர் விடுதி மாணவர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்துரையாட இருந்தார். இதற்காக மாணவர்களை சந்திக்க காரில் சென்றபோது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர் தட்டி கேட்டபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் போலீசாரின் தடையை மீறி ராகுல் காந்தி நடந்தே சென்று மாணவர்களை சந்தித்து பேசினார். அப்போது, ‘பீகார் போலீசார் என்னை தடுக்க முயன்றனர். அவர்களால் என்னை தடுக்க முடியவில்லை. ஏனென்றால் மாணவர்களாகிய உங்கள் சக்தி என்னை கண்காணித்து கொண்டிருக்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கூறினோம். உங்களுடைய அழுத்தத்தினால் சாதி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்” என்று ராகுல் பேசியுள்ளார்.
The post பீகாரில் மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.