“பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும், மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை” - புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

2 hours ago 2

புதுச்சேரி: “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை,” என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டி, புதுச்சேரியில் தேசியக் கொடி ஏந்தி பாஜக சார்பில் வெற்றி பேரணி இன்று நடைபெற்றது. புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணிக்கு பாஜக மாநில தலைவர் செல்வகணபதி தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article