பிளே ஆப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே.. கேப்டன் தோனி கூறியது என்ன..?

2 weeks ago 7

சென்னை,

ஐ.பி.எல். தொடரில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாம் கர்ரன் 88 ரன்கள் அடித்தார். ஒரு கட்டத்தில் 200 ரன்களை எளிதில் தாண்டுவது போல் சென்ற ஸ்கோர் கடைசி 18 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்ததால் அந்த ஸ்கோரை அடைய முடியாமல் போய் விட்டது. பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்கள் அடித்தார்.

10-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 8-வது தோல்வியாகும். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியது.

இந்நிலையில் இந்த தோல்விக்குப்பின் சென்னை கேப்டன் மகேந்திரசிங் தோனி அளித்த பேட்டியில், "இந்த சீசனில் முதல் முறையாக சென்னை அணி தரப்பில் சிறந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அது சராசரிக்கும் குறைவாக இருந்ததாகவே பார்க்கிறேன். இன்னும் கொஞ்ச ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். கடைசி நேரத்தில் 4 விக்கெட்கள் இழந்ததால், கடைசி ஓவரில் ஆல் அவுட் ஆகி 4 பந்துகளை எதிர்கொள்ள முடியாமலும் போனது. இது போன்ற நெருக்கமான போட்டிகளில் இவை நிறைய அர்த்தங்கள் கொண்டவை.

ஒரு கட்டத்தில் சாம் கரண் மற்றும் பிரேவிஸ் ஆகியோரது பார்ட்னர்ஷிப் மிகச்சிறப்பாக இருந்தது. அவர்கள் கொடுத்த அந்த உத்வேகத்தை அதன்பிறகு எங்களால் கொண்டு செல்ல முடியவில்லை. எங்களுடைய இன்னிங்சின் கடைசி 4 பந்துகளை நாங்கள் விளையாடவில்லை.

அதேபோன்று 19 ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அந்த ஏழு பந்துகள் மிக முக்கியமானது. அது இந்த போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியின் இறுதிவரை விளையாடி இன்னும் கூடுதலாக ரன்களை சேர்த்திருந்தால் தோல்வியை தவிர்த்து இருக்கலாம்" என்று கூறினார். 

Read Entire Article