சென்னை: பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக பொய் அறிக்கை தாக்கல் செய்ததாக நீலகிரி ஆட்சியருக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. வன விலங்குகள், வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்தபோது உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நீலகிரியில் பிளாஸ்டிக் தடை, குடிநீர் விநியோக மையங்கள் போன்ற சுந்த மையங்களும் செயல்படவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பிப்.4ம் தேதி நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்தியதாக பொய் அறிக்கை தாக்கல் செய்ததாக நீலகிரி ஆட்சியருக்கு ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.