பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்: அன்புமணி ராமதாஸ்

4 hours ago 3

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டைவிட அதிகமாக நடப்பாண்டில் 95.03 விழுக்காடு மாணவ-மாணவிகள் வெற்றிபெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல ஆலோசனை பெற்று சிறந்த உயர் கல்வி பயிலும்படி அறிவுறுத்துகிறேன். அதேபோல், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவச் செல்வங்கள், விரைவில் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Read Entire Article