
இஸ்லாமாபாத்,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் நிலவி வருகிறது .
இந்த நிலையில். பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நகருக்கு மாற்றுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ராவல்பிண்டி வந்துள்ள கிரிக்கெட் வீரர்கள் உடனே நகரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது .