'பிளடி பெக்கர்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

2 months ago 18

சென்னை,

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளவில் 600 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு பிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார்.

நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளடி பெக்கர்' . இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

'பிளடி பெக்கர்' படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. 'பிளடி பெக்கர்' படத்திற்கு தணிக்கை குழு "யு/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து 'பெக்கர் வாலா' எனும் இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடல் மிகவும் வைபாக அந்தோணி தாசன் குரலில் அமைந்துள்ளது. படத்தில் நடித்த முன்னணி கதாப்பாத்திரங்கள் இப்பாடலில் நடனமாடியுள்ளனர்.

second single #BeggarWaala from #BloodyBeggar is out now #BloodyBeggarFromDiwali https://t.co/yZB2HVKYNR

— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) October 25, 2024

இப்படம் வரும் 31-ம் தேதி தீபாவளிக்கு வெளியாக உள்ளது. தீபாவளியன்று பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர், சிவகார்த்திகேயனின் அமரன், துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இதன்மூலம் இந்த தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது.

Read Entire Article