இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார்?.. இங்கிலாந்து தொடரில் யாருக்கெல்லாம் இடம்..? இன்று அறிவிப்பு

3 hours ago 5

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) சுழற்சியில் இந்தியாவின் முதல் தொடர் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்டதால் அவருக்கு பதிலாக புதிய டெஸ்ட் கேப்டன் தேர்வு செய்யப்படுகிறார்.

அந்த பதவிக்கு சுப்மன் கில் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் ஆகியோரின் பெயர்களும் கேப்டன் பதவிக்கு அடிபடுகின்றன.

ரோகித் சர்மா மற்றும் கோலி டெஸ்ட் தொடரில் ஓய்வு பெற்று விட்டதால் அவர்களின் இடத்தை பிடிக்க போகும் வீரர்கள் யார்-யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன், கருண் நாயர், சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article