சென்னை : மாற்றுக்கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பின்னர் பேசிய அவர், “திமுக என்பது நேற்று முளைத்த காளான் அல்ல, 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற நோக்கத்துக்காக தோன்றியது திமுக. தொடங்கிய உடனேயே ஆட்சிக்கு வருவோம் என்று இன்று சிலர் கூறி வருகின்றனர்.7-வது முறையாக திமுக தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி அமைக்கும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தோன்றியது திமுக :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!! appeared first on Dinakaran.