சென்னை: பிறப்பால் வரும் சாதி, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. சாதி என்ற தேவையில்லாத சுமையை, சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழ் இறக்கவில்லை. சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் ஜாதி, வளர்ச்சிக்கு எதிரானது. ஜாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலிக்காது என நீதிபதி பரதசக்கரவர்த்தி திட்டவட்டம் தெரிவித்துள்ளார். மேலும், ஜாதியை நிரந்தரமாக்கச் செய்யும் வகையிலான கோரிக்கை, அரசியல் சாசனம், பொது கொள்கைக்கு விரோதமானது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
The post பிறப்பால் வரும் சாதி, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது: ஐகோர்ட் நீதிபதி வேதனை! appeared first on Dinakaran.