
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பகுதியில் பிறந்தநாள் விழாவில் பலரும் விருந்து சாப்பிட்டனர். பின்னர் விழா முடிந்த பின்னர் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என சுமார் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மருத்துவமனைக்கு செல்லாத 60 வயதான கருப்பையா என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது தொடர்பாக ஏம்பல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.