திருவனந்தபுரம்,
கடந்த ஆண்டு மிகப்பெரிய லாபம் ஈட்டிய படங்களில் ஒன்று பிரேமலு. உலகளவில் ரூ.136 கோடி வசூல் செய்தது. இந்த வசூல் பெரிதாக தெரியவில்லை என்றாலும், படத்தில் எந்த ஒரு நட்சத்திரங்களும் இல்லாமல், புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அதன் பட்ஜெட்டை விட 45 மடங்கு அதிக லாபத்தை பெற்றது. கிரிஷ் ஏ.டி இயக்கிய இப்படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, 2-ம் பாகத்தை படக்குழு அறிவித்தது.
இந்நிலையில், பிரேமலு 2 குறித்த அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் திலீஸ் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'பிரேமலு 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்துவிட்டன. படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் துவங்கி ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்' என்றார்.