பிரேசில் நாட்டில் தங்கள் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி பழங்குடியின மக்கள் பேரணி சென்றனர். சிங்கம், புலி, ஓநாய் போன்ற விலங்குகளின் பதாகைகளை கையில் ஏந்தியபடி அவர்கள் சென்றனர்.
புவி வெப்பமடைதல் மற்றும் உலகில் காலநிலை நெருக்கடி ஏற்படுவதை தடுக்க வனப்பகுதிகள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நடனத்தை பழங்குடியின மக்கள் ஆடினர்.