சென்னை: புதிய விரிவான மினி பேருந்து திட்டம் வரும் ஜூன் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ஏற்கெனவே போக்குவரத்து சேவையுள்ள இடங்களில் 8.75 கிமீ மினி பேருந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டது.