பிரேசில் சென்றார் பிரதமர் மோடி; பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு

8 hours ago 3

ரியோ டி ஜெனிரோ,

பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவருக்கு 2 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதன்பின் அர்ஜென்டினாவுக்கு புறப்பட்டு சென்றார். அந்நாட்டின் எஜீஜா சர்வதேச விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

57 ஆண்டுகளில் இந்திய பிரதமரின் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். அவருடைய வருகையை முன்னிட்டு, இந்திய சமூகத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த பயணத்திற்கு பின்னர், பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இன்று அதிகாலை அந்நாட்டுக்கு சென்றார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட ஒரு செய்தியில், பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரை சென்றடைந்துள்ளேன். இதன்பின், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின்பேரில், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு செல்கிறேன்.

இந்த பயணத்தில், ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார். பிரேசில் நாட்டுக்கான பயணம் முடிந்ததும், இறுதியாக நமீபியா நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Landed in Rio de Janeiro, Brazil where I will take part in the BRICS Summit and later go to their capital, Brasília, for a state visit on the invitation of President Lula. Hoping for a productive round of meetings and interactions during this visit.@LulaOficial pic.twitter.com/9LAw26gd4Q

— Narendra Modi (@narendramodi) July 5, 2025
Read Entire Article