பிரேசிலா,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். அந்நாட்டின் சவ் பலோ மாகாணத்தை நேற்று சக்திவாய்ந்த புயல் தாக்கியது.
கனமழையுடன் மணிக்கு 108 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. புயலால் சவ் பலோ மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது. இதனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின.
இந்நிலையில், பிரேசிலை தாக்கிய புயலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். புயலின் தாக்கம் தீவிரமாக உள்ளநிலையில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.