பிரிவுஉபசார விழாவில் மோதல்; 10ம் வகுப்பு மாணவர் அடித்துக்கொலை: சக மாணவர்கள் 5 பேர் கைது

1 day ago 2

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள தாமரைசேரி பகுதியில் ஒரு டியூஷன் சென்டர் உள்ளது. இங்கு படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. அதில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நடனம் ஆடியபோது திடீரென பாட்டு நின்றது. இதை வேறொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கேலி செய்தனர்.

இதனால் நடனமாடிய மாணவர்கள் தரப்பினருக்கும், கேலி செய்த மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன் வெளி ஆட்கள் சிலரை அழைத்து வந்து எதிர் கோஷ்டியை சேர்ந்த மாணவர்களை தேடி கண்டுபிடித்து தாக்கியுள்ளனர்.

இதில் முகம்மது ஷஹபாஸ் (15) என்ற 10ம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்து கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி முகம்மது ஷஹபாஸ் நேற்று அதிகாலை உயிரிழந்தான்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாமரைசேரி போலீசார் எதிர்கோஷ்டியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர்கள் 5 பேரை கைது செய்து சிறுவர் நல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

The post பிரிவுஉபசார விழாவில் மோதல்; 10ம் வகுப்பு மாணவர் அடித்துக்கொலை: சக மாணவர்கள் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article