பிரிட்டன்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் இதுவரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதற்கிடையில், சமுதாயத்திற்கு சிறப்பாக பங்காற்றியதற்காக, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவிக்கு பாராட்டு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதில் கலந்துகொள்வதற்காக சிரஞ்சீவி இன்று காலை இங்கிலாந்து சென்றார்.
அப்போது லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு சிரஞ்சீவிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரிட்ஜ் இந்தியா’ அமைப்பு சார்பாக திரைப்படத்துறை மற்றும் சமூகத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்காக சிரஞ்சீவிக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இத்தகைய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.
The post பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவம்..!! appeared first on Dinakaran.