சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீது நடந்த பொது விவாதத்தின் போது உறுப்பினர்கள் பேசியதாவது: குமாரபாளையம் எம்எல்ஏ, தங்கமணி (அதிமுக): மூலதனக் கணக்காக, மூலதன முதலீட்டிற்காக நாம் வாங்குகின்ற கடனை வாங்கிதான் செலவு செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் நிதித்துறை அமைச்சர் குறிப்பிடும்போது, நீங்கள் வாங்கிய கடனுக்கும், நாங்கள் வாங்கிய கடனுக்கும் சதவிகிதத்தைப் பாருங்கள் என்று சொன்னார்.
கடந்த 73 ஆண்டு காலத்தில் வாங்கிய கடனைக் காட்டிலும், 5 ஆண்டுகாலத்தில் கிட்டதட்ட 4½ லட்சம் கோடி ரூபாய் கடனை வாங்கியிருக்கிறீர்கள். இது எங்கே போய் முடியும்? அமைச்சர் தங்கம் தென்னரசு: கடன் எதற்காக வாங்கப்படுகிறது. கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டால், கடன் எந்த விகிதத்தில் வாங்க வேண்டும் என்று இருக்கிறதோ அந்த அளவிற்குள்தான் நாங்கள் கடன் வாங்குவோமே தவிர, நிதிக் குழு கொடுத்திருக்கிற லீவரேஜ் இன்னும் இரண்டு சதவிகிதம் இருக்கிறது என்பதற்காக ஒருபோதும் கடன் வாங்குவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.
The post நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கடன் அளவை மீறி கடன் வாங்க மாட்டோம் appeared first on Dinakaran.