தமிழக சட்டப் பேரவையில் நேற்று விவாதத்தில் கலந்து கொண்டு பெண்ணாகரம் ஜி.கே.மணி(பாமக) பேசியதாவது: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்கிறோம். அது இன்னும் நிலுவையில் இருக்கிறது. அமைச்சர் மெய்யநாதன்: சாதி வாரி கணக்கெடுப்பை பொறுத்தவரைக்கும் அது ஒன்றிய அரசுதான் எடுக்க வேண்டும். காரணம், சென்சஸ் ஆக்ட் 1948 ஒன்றிய அரசின்கீழ் இருக்கிறது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து எடுக்க கோரி முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
* நயினார் நாகேந்திரன் (பாஜ): ஒன்றிய அரசு எடுக்க வேண்டுமென்பது இல்லை. மாநில அரசுதான் எடுக்க வேண்டும்.
* வேல்முருகன் (தவாக): தற்போது தெலங்கானாவில் எடுத்து அனைத்து சாதிகளுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீட்டு சதவிகிதத்தை உயர்த்தி வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்கள்.
* செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கிற அதிகாரம் முக்கியமாக ஒன்றிய அரசுக்கு மட்டும்தான் இருக்கிறது. மாநில அரசுக்குக் கிடையாது. தெலங்கானாவில் நடந்தது சாதிவாரி கணக்கெடுப்பு கிடையாது.
* அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்: சர்வே எடுக்கும் வேலையைத்தான் நாம் செய்ய முடியும். கணக்கெடுப்பு எடுப்பதற்கு ஒரு துறை ஒன்றிய அரசிடம் இருக்கிறது. எதற்கு அந்தத் துறை இருக்கிறது? அவர்கள்தான் அந்தப் பணியைச் செய்ய வேண்டும்.
The post ஒன்றிய அரசுக்கா? மாநில அரசுக்கா? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த யாருக்கு அதிகாரம்? பேரவையில் காரசார விவாதம் appeared first on Dinakaran.