பிரான்ஸ் ராணியின் வைர நெக்லஸ் ஏலத்தில் விற்பனை.. இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது

2 months ago 13
18 ஆம் நூற்றாண்டில் பிரஞ்சு புரட்சியின் போது கொல்லப்பட்ட பிரான்ஸ் ராணி மேரி அன்டோனெட்டின் வைர நெக்லஸ் இந்திய மதிப்பில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஏலத்தில், 500 வைரங்களை கொண்டதும், 300 கேரட் எடை உள்ளதுமான அந்த நெக்லசை, பெண் ஒருவர் விலைக்கு வாங்கியதாக ஏல நிறுவனத்தினர் கூறி உள்ளனர். ஆஸ்திரிய அரசு குடும்பத்தில் பிறந்த மேரி அன்டோனெட், பிரான்ஸ் அரசரான பதினாறாம் லூயியை  மணந்த போது திருமண பரிசாக வழங்கப்பட்ட நெக்லஸ் இப்போது ஏலத்தில் 20 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 
Read Entire Article