சென்னை: காவல்துறையில் ஏற்படும் மிகவும் சிக்கலான தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்டுவதற்கு கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களை ஈடுபடுத்துவதன் மூலம் புதுமை மற்றும் படைப்பாற்றலைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு இணையவழிக் குற்றப்பிரிவு தலைமையகம் ஏற்பாடு செய்த தமிழ்நாடு போலீஸ் ஹேக்கத்தான் 2024 என்ற நிகழ்வு இன்று பெரும் வெற்றியுடன் நிறைவடைந்தது. தொழில்நுட்ப ஆர்வலர்கள், பல்வேறு கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
சட்ட அமலாக்கதுறையின் நிஜ உலகப்பிரச்சினைகளை அதிநவீன தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் அணுக தமிழ்நாடு போலீஸ் ஹேக்கத்தான் 2024 வழிவகை செய்கிறது. இந்த ஹேக்கத்தான் நிகழ்விற்காக 5 தலைப்புகளில் தீர்வுகாண அறிக்கைகளை வடிவமைத்துள்ளது இணைய வழிகுற்றப்பிரிவு. அவை.
i “Dark Eye டார்க் வெப்க்கான நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு
ii Tor Unveil-டோர் மெயில்புலனாய்வு
iii VoIPCrack. VoIP அழைப்பு இடைமறிப்பு மற்றும் பகுப்பாய்வு
iv. டெலிகிராம் சென்டினல்
V. “AdShield”-சமூக ஊடக இலக்கு விளம்பர அடையாளம் & சைபர் மோசடிகளுக்கான பகுப்பாய்வு,
இதில் பல கல்லூரிகளில் இருந்து 315 தீர்வு சுருக்கள் பெறப்பெற்றன. அவற்றில் 54 தீர்வு சுருக்கள் ஐஐடி மெட்ராஸ் மற்றும் எல்காட் ஆகியவற்றின் நடுவர் மன்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்ட தீர்வு, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சாத்தியம், அளவிடுதல் மற்றும் நோக்கம் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட 54 அணிகளுக்கு 2025 பிப்ரவரி 4 மற்றும் 5 தேதிகளில் காவல் துறை தலைமை அலுவலகத்தில் உள்ள அரங்கில் இரண்டாவது சுற்று நடைபெற்றது. இதிலிருந்து15 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அனைத்து அணிகளும் புதுமையான முன் மாதிரிகளை உருவாக்க அயராது உழைத்தன.
தமிழ்நாடு காவல்துறை ஹேக்கத்தான் 2024இன் நிறைவுவிழா, பிப்ரவரி 5, 2025 அன்று மாலை 4:00 மணிக்கு காவல்துறை தலைமை அலுவலக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல்துறை தலைமை இயக்குநர்/காவல்துறை படைத் தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். டாக்டர். சந்தீப் மித்தல் இகாப கூடுதல் காவல்துறை இயக்குநர், இணையவழிக் குற்றப்பிரிவு அவர்களின் வரவேற்பு உரையுடன் நிகழ்வு தொடங்கியது.
TN போலீஸ் ஹேக்கத்தானின் வெற்றியாளர்கள் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளைப் பெற்ற கல்லூரிகள் ஆர். எம். கே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி ஆகும். இவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் முதல் இடத்திற்கு ரூ. 1,00,000/- இரண்டாம் இடத்திற்கு ரூ. 75,000/- மற்றும் மூன்றாம் இடத்திற்கு ரூ. 50,000/- ரொக்கப் பரிசுகளை வழங்கப்பட்டன.
வெற்றிபெற்ற அணிகளைத் தவிர, இரண்டாவது சுற்றில் பட்டியலிடப்பட்ட 12 அணிகள் தலா ரூ.5,000/- ரொக்கப் பரிசுகளுடன் சிறந்த பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டன.
தமிழ்நாடு காவல்துறை ஹேக்கத்தான் 2024, நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தின் திறனை கண்டறிந்துள்ளது.
சைபர் கிரைம் பிரிவின் சில சிறப்பம்சங்கள் & நடவடிக்கைகள் 2024
1930 உதவி எண்ணில் சராசரியாக 750 அழைப்புகள் மற்றும் 450 புகார்கள் தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் (NCRP) தளத்தில் தினசரி பதிவு செய்ய்யப்படுகின்றன.
மேற்படி புகல் மூலம், ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான காலகட்டத்தில் 1673.85 கோடி இழப்பு ஏற்பட்டு.ரூ. 77198 கோடி குற்றவாளிகளின் வங்கி கணக்குகளில் முடக்கப்பட்டு, சுமார் 83.34 கோடி ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டது.
மொத்தம், 861 குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 35 குற்றவாளிகள் குண்டர்கள் சட்டத்தின் கீழ் ஜனவரி முதல் டிசம்பர் 2024 வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சமூக ஊடக தளங்கள் மற்றும் செய்தியிடல் தளங்களை உள்ளடக்கிய இணைய வெளியில் மோசடி நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்காணிக்கவும் எதிர்க்கவும் பிரத்யேக சைபர் ரோந்துக் குழு நிறுவப்பட்டுள்ளது. போலி NCRP போர்ட்டல் உட்பட 15 போலி இணையதளங்கள் நீக்கப்பட்டன. முதலீட்டு மோசடிகளை ஊக்குவிக்கும் குழுக்களின் அட்மின்களின் 121 வாட்ஸ்அப் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன.
CEIR போர்ட்டல் வழியாக கைபேசிகள் மீட்பு: மொத்தம் 79,748 IMEI கள் முடக்க பட்டு மற்றும் 48,031 மொபைல் போன்கள் கண்டறியப்பட்டு 16.317கைபேசிகள் மீட்கப்பட்டன.
TNOGA இன் கோரிக்கையின் பேரில் 5 சூதாட்ட இணையதளங்கள் அகற்றப்பட்டன.
அரசு/தனியார் இணையதளங்களில் 21 பாதிப்புகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன.
2024 யில் இணைய குற்றங்களில் சமந்தப்பட்ட 20453 சிம்கள்/ மொபைல் எண்கள் முடக்கபட்டுள்ளது.
சைபர் கிரைம் பிரிவு பள்ளிகளில் 1042 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், கல்லூரிகளில் 819நிகழ்ச்சிகளையும், பொது இடங்களில் 6095 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியது.
ஆபரேஷன் “திரைநீக்கு: சைபர் கிரைம் பிரிவு 2024 டிசம்பர் 6, 7 மற்றும் 8 தேதிகளில் புயல்
நடவடிக்கையை நடத்தியது மற்றும் அனைத்து CCPS மூலம் குற்றம் சாட்டப்பட்ட 76 பேரை தமிழகம் முழுவதும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இணைய வழி குற்ற பிரிவு, 1930 Walkathon ஐ நடத்தியது. அதில் விரிவாக்கப்பட்ட 1930 Cyber Crime Control Room இன் திறப்பு விழாவை 8 இருக்கைகளில் இருந்து 15 இருக்கைகளாக விரிவாக்கபட்டு திறந்து வைக்க பட்டது.
Cyber Safety Cartoon Series “சைபர் குற்றங்களும் தம்பியின் வழிக்காட்டுதலும் எனும் கார்ட்டூன் புத்தகம், தமிழ்நாடு காவல்துறைத் தலைவர், காவல்துறை இயக்குநர் அவர்களின் விழிப்புணர்வு குறும்பட வீடியோ மற்றும் நடிகர் திரு. கார்த்திக் சிவகுமார் அவர்களின் விழிப்புணர்வு குறும்படமும் வெளியிடபட்டது.
The post ‘தமிழ்நாடு போலீஸ் ஹேக்கத்தான் 2024’ நிகழ்வு நிறைவடைந்தது! appeared first on Dinakaran.