
பாரீஸ்,
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பிரான்ஸ் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பதிலடியாக தலைநகர் பாரீஸ் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சிறைச்சாலை மீது போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தாக்குதல் நடத்தின.
அதன்படி இரவு நேரத்தில் சிறையின் வாகன நிறுத்துமிடங்களில் நின்ற கார்களை அவர்கள் தீ வைத்து கொளுத்தினர். மேலும் டூலோன் நகரில் உள்ள சிறைச்சாலை மீது வெடிகுண்டு வீசப்பட்டது.
இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதித்துறை மந்திரி ஜெரால்ட் டார்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.