விஜய் போராட்டத்தில் சேதமடைந்த தடுப்புகள்

6 hours ago 2

சென்னை ,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் மரணங்களுக்கு நீதி கோரி தவெக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். முதன்முறையாக போராட்டக்களத்திற்கு விஜய் வந்ததால் தவெக-வினர் குவிந்தனர். இந்த கூட்டத்தில் அரசுக்கு தனது எதிர்ப்பை காட்டும் வகையில் விஜய் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.

இந்த நிலையில் , சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த போராட்டத்தில் விஜயை பார்க்க முண்டியடித்துச் சென்ற தொண்டர்களால் தடுப்புகள் சேதமடைந்துள்ளன. சாலையின் நடுவே இருந்த ஸ்டீல் பைப்புகளில் தொண்டர்கள் ஏறியதில், அவை சேதமடைந்து சாலையில் உடைந்துகிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

Read Entire Article