சென்னை: பிராட்வேயை பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், போக்குவரத்து வளாகமாக மாற்றும் திட்டத்திற்கு ரூ.566 கோடியில் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாக கட்டடம் 1,08,290 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. பேருந்து வளாக கட்டடத்தில் 2 அடித்தள நிலைகள், ஒரு தரைத்தளம் மற்றும் 8 மேல் தளங்கள் அமைகின்றன. 2 அடித்தள நிலைகள், தரைத்தளம் மற்றும் 9 மேல் தளங்களுடன் குறளகம் கட்டடம் அமைகிறது.
The post பிராட்வே பேருந்து முனைய வளாகம், பல்நோக்கு வணிக வளாகம் அமைக்கப்படும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்..!! appeared first on Dinakaran.