பிரபுதேவா நிகழ்ச்சியில் நடனமாடிய தனுஷ்

5 hours ago 1

சென்னை,

பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று, மிகுந்த உற்சாகத்துடன் நடன நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அவர்களை ஆச்சரியப் படுத்தும் வகையில், பிரபுதேவா அசாத்தியமாக நடனமாடினார். இதில், நடிகர்கள் தனுஷ், வடிவேலு, எஸ். ஜே. சூர்யா மற்றும் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், பிரபு தேவா தான் நடித்த, நடன இயக்குநராகப் பணியாற்றிய பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

மைதானம் முழுவதும் நிரம்பியிருந்த ரசிகர்கள் செல்போனில் டார்ச் ஒளிரச் செய்து பிரபுதேவாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 100 நடன கலைஞர்களின் மத்தியில் 'ஊர்வசி ஊர்வசி' பாடலுடன் பிரபுதேவா அரங்கம் அதிர நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது. "ரசிகர்களின் விசில் சத்தம் தான் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி கொண்டு வருகிறது" என்றார்.

ரௌடி பேபி பாடலுக்கு நடிகர் தனுஷும் , காத்தடிக்குது பாடலுக்கு நடிகர் எஸ். ஜே. சூர்யாவும் பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடியது பலரையும் கவர்ந்தது. மேலும், நடிகர்கள் பரத், சாந்தனு, லட்சுமி ராய், ரித்திகா சிங், சானியா ஐயப்பன், ப்ரீத்தி அஸ்ராணி, பார்வதி நாயர், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

1989-ல் வெளியான 'இந்து' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான அவர் தொடர்ந்து காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ என பல்வேறு படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக, அவரது படங்களில் நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெஸ்டர்ன் வகை பாடல்கள், தேவாவின் துள்ளலான குத்துப் பாடல்களுக்கு பிரபுதேவா சிறப்பாக ஆடியதால், அவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று போற்றினர். மின்சாரக் கனவு படத்தில் 'வெண்ணிலவே வெண்ணிலவே' என்ற பாடலுக்கு சிறந்த முறையில் நடனம் அமைத்ததற்காக பிரபுதேவா தேசிய விருது பெற்றார். தொடர்ந்து, இந்தி, தமிழ் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

Read Entire Article