பிரபல பாலிவுட் நடிகருடன் மதிய உணவு சாப்பிட விரும்பும் ஆஸ்திரேலிய பாடகி

6 months ago 14

சென்னை,

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்சய் குமார். இவர், தமிழில் ரஜினியுடன் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரின் நடிப்பில் ஓஎம்ஜி -2, 'சர்பிரா', 'கேல் கேல் மெய்ன்' மற்றும் சிங்கம் அகெய்ன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.

இவரது நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் புளூ. அந்தோணி டி'சோசா இயக்கிய இப்படத்தில் அக்சய் குமார், சஞ்சய் தத், கத்ரீனா கைப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்தில், இடம்பெற்ற 'சிகி விக்கி' பாடலை பிரபல ஆஸ்திரேலிய பாடகி கைலி மினாக் பாடியிருந்தார். மேலும், அக்சய் குமாருடன் இப்பாடலுக்கு நடனமாடியும் இருந்தார். இந்நிலையில் மும்பையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொணட கைலி மினாக், மும்பையில் இருந்த காலத்தின் இனிமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்,

மேலும், அக்சய்குமாருடன் அவரது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டதையும் நினைவுக்கூர்ந்தார். தொடர்ந்து பேசிய அவர், அக்சய்குமார் மீண்டும் தன்னை மதிய உணவு சாப்பிட அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.


Read Entire Article