
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆனைகுடியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் முத்துராஜா (29 வயது). இவர் பக்கத்து ஊரான இடையன்குடி பகுதியில் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று முத்துராஜா, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முத்துராஜாவை கைது செய்தனர்.