சினிமாவோ, வெப் தொடரோ நல்ல கதாபாத்திரங்கள் எங்கு கிடைத்தாலும் முத்திரை பதிக்கலாம் - அனுமோல்

2 hours ago 2

சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி பின்னர் சினிமாவில் ஜொலித்து வரும் மலையாள நடிகை அனுமோல், தமிழில் 'சூரன்', 'திலகர்', 'ஒருநாள் இரவில்', 'பர்ஹானா', 'ஹரா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 'அயலி', 'ஹார்ட் பீட்' வெப் தொடரில் நடித்தும் கவனம் ஈர்த்தார்.

இதற்கிடையில் அவர் நடித்துள்ள 'ஹார்ட் பீட்-2' வெப் தொடர் விரைவில் வெளியாகிறது. இதில் தீபா பாலு, சாருகேஷ், சர்வா, பதின்குமார், ராம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதுகுறித்து அனுமோல் கூறும்போது, "ஒரு நடிகை என்பவர் சினிமாவில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பது கிடையாது. சினிமாவோ, வெப் தொடரோ நல்ல கதாபாத்திரங்கள் எங்கு கிடைத்தாலும் அதில் முத்திரை பதிக்கலாம். ரசிகர்களை கவரலாம்.

அயலி வெப் தொடரில் எனது குருவம்மா கதாபாத்திரமும், ஹார்ட் பீட் வெப் தொடரில் எனது ரதி கதாபாத்திரமும் இன்றளவும் ரசிகர்களை, குறிப்பாக இல்லத்தரசிகளை ஈர்த்துள்ளது. வெளிமாநிலங்களிலும் என்னை தங்கள் வீட்டு பெண்ணாக பார்த்து அன்பு காட்டுகிறார்கள். இதற்காக ரசிகர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். பேர் சொல்லும்படியான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பேன்" என்றார்.

Read Entire Article