
புதுடெல்லி,
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் குறித்த உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மாநிலங்களவையில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சந்திரசேகர் பெம்மசானி பதிலளித்தார்.
அவர் பேசும்போது, 'நடப்பு நிதியாண்டில் அசாம், பீகார், சத்தீஷ்கார், கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 18 மாநிலங்களில் 84.37 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் சுமார் 40 லட்சம் வீடுகளுக்கு (39.82 லட்சம்) இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது' என்று கூறினார்.
அசாம், ராஜஸ்தான், பீகார், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் 46.56 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.