பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை

4 hours ago 1

புதுடெல்லி,

 பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை நடத்த முயற்சித்து வருகிறது. துருக்கியில் இருந்து வாங்கப்பட்ட நூற்றுக்கணக்கான டிரோன்களை கொண்டு எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்த முயன்ற தாக்குதலை வெற்றிகரமாக இந்தியா முறியடித்தது. 

கடந்த மூன்று தினங்களாக எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறல் நீடித்து வருகிறது. இதனால், எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் மேற்கொண்டது.

இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தற்போதைய நிலவரம், போர் பதற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

Read Entire Article