பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்-மந்திரி சந்திப்பு

2 months ago 16

டெல்லி,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில், தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரியாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா பொறுப்பேற்றுள்ளார்.

இதன்பின் உமர் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு கவர்னரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில் டெல்லி சென்ற முதல்-மந்திரி உமர் அப்துல்லா நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Read Entire Article