
டெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் இன்று தேசிய ஜனநாய கூட்டணி முதல்-மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றுள்ள 20 மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர். அதேபோல், 18 மாநில துணை முதல்-மந்திரிகளும் பங்கேற்றனர்.
அதேபோல், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவாகவும், சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆதரவாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல், நக்சலைட்டுகளை ஒழிக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.