"அஜித்குமார் ரேசிங் " பெயரில் யூ டியூப் சேனல் தொடங்கிய அஜித்

4 hours ago 4

நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். கடந்த 2001ஆம் ஆண்டு முதல் கார் ரேஸில் அஜித் ஆர்வம் காட்டத் தொடங்கினார். கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கிள் தீவிரம் காட்டி வரும் அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார். இதற்கிடைய, அறித் தனது சொந்த பந்தய அணியான 'அஜித்குமார் ரேசிங்' உருவாக்கினார். இந்த அணி மூலம் அவர் பந்தயங்களில் பங்கேற்றதோடு, இளம் பந்தய வீரர்களை ஊக்குவித்து வருகிறார்.

இந்தாண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. மேலும், இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.அதனை தொடர்ந்து, ஐரோப்பாவில் ஜிடி-4 கார் பந்தயம் நடைபெற்று வரும் நிலையில் அதில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற பார்முலா 1 கார் பந்தய வீரரான அயர்டன் சென்னா சிலையின் காலில் நடிகர் அஜித் குமார் முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

 

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் அதிகாரபூர்வ யூடியூப் சேனல் 'அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேனல் அவரது கார் ரேசிங் தொடர்பான செயல்பாடுகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது. இதில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சி வீடியோக்கள் மற்றும் தொடர்புடைய பிற உள்ளடக்கங்கள் பகிரப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சேனல் மூலம் அஜிக் குமார் தனது ரேசிங் ஆர்வத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அஜித் குமாரின் யூடியூப் சேனல் தொடங்கிய சில மணி நேரங்களில் 17 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

Ajith Kumar Racing goes live from MisanoWe're all set to race in the Creventic Endurance Series – catch the action live on our official YouTube channel.Endurance. Speed. Precision. This is Ajith Kumar Racing.Location: Misano World CircuitTime: 12:30 PM todayWatch here:… pic.twitter.com/ZxdCbWIGWC

— Ajithkumar Racing (@Akracingoffl) May 24, 2025
Read Entire Article