
சென்னை,
'லவ் டுடே' படத்தின் வெற்றியைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம் 'டிராகன் '. தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு 'டியூட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு வளர்ந்து வரும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமக்க உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்திற்கான இசைப்பணிகளை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் துவங்கியுள்ளார். இதுகுறித்த பதிவை இயக்குனர் கீர்த்தீஸ்வரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.