
இஸ்லாமாபாத்,
உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் இடம் கூகுள் என்றே சொல்லலாம். தொழில்நுட்ப வளர்ச்சியில், வடதுருவத்தில் நடக்கும் ஒரு விஷயம் தென்துருவத்தில் அடுத்த சில நிமிடங்களில் நம் கையில் கொடுத்துவிடுகிறது கூகுள். அப்படிதான் இன்று இந்தியா நடத்திய 'ஆபரேஷன் செந்தூர்' பற்றியத் தேடல் கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. தேடிய நாடு பாகிஸ்தான். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (7ஆம் தேதி) அதிகாலை 1.05 மணியில் இருந்து 1.30க்குள் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒன்பது பயங்கரவாதிகள் முகாமை அதிரடியாக அழித்துள்ளது. இதற்கு, 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் பற்றிய படங்களும், காணொளிகளும் சமூகவலைதளங்களை முழுமையாக இன்று ஆட்கொண்டது எனலாம். அதேபோல், பாகிஸ்தானியர்கள் இன்று கூகுளில் அதிகளவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தேடியுள்ளனர்.
அதன்படி, பாகிஸ்தானியர்கள் அதிகம் தேடிய அந்த வார்த்தை என்னவென்றால், சிந்தூர் என்றால் என்ன? இதேபோல், ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன, ஆபரேஷன் சிந்தூர் விக்கி என தேடியுள்ளனர்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில், 'இந்தியா ஏவுகணையை ஏவுகிறது','இந்தியா ஏவுகணை தாக்குதல்', 'பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்' உள்ளிட்டவைகளையும் தேடியுள்ளனர். அதேபோல், பாகிஸ்தானின் பல பகுதிகளிலும், 'வெள்ளை கொடி' என்பதை தேடியுள்ளனர். கூகுளில் பாகிஸ்தானியர்கள் அதிகம் தேடிய சொற்களாக,'இந்தியா போரை அறிவித்தது','இன்று இந்தியா பாகிஸ்தான் போர்','போர் தகவல்கள்'ஆகிய சொற்களை அதிகம் தேடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.