
பெங்களூரு,
பெங்களூருவை சேர்ந்த ஒரு வாலிபர் இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதாவது பாகிஸ்தான் ஏன் பிரதமர் மோடி வீட்டின் மீது குண்டு வீசவில்லை? இந்தியாவில் அமைதி நிலவியபோது போர்ப்பதற்றத்தை ஏற்படுத்தியது அவர்தான். அவர் வீட்டின் மீது பாகிஸ்தான் குண்டு வீசவேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகள் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து இந்து அமைப்பினர் பண்டேபாளையா போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் பெங்களூரு மங்கம்மனபாளையாவை சேர்ந்த நவாஜ்(வயது 27) என்பது தெரியவந்தது. இவர் இந்தியா-பாகிஸ்தான் சண்டையால் விரக்தியடைந்து இந்த வீடியோவை பதிவிட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் பண்டேபாளையா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.